காதல் கவிதை

உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!

2 மறுமொழிகள்

  1. Anantha சொன்னது,

    செப்டம்பர்4, 2009 இல் 6:32 மாலை

    நீங்க‌ உவ‌மையெல்லாம் ரொம்ப‌ அழ‌கா எடுக்குறிங்க‌.. வாழ்த்துக்க‌ள்

    • ramanans சொன்னது,

      செப்டம்பர்5, 2009 இல் 9:05 காலை

      மிக்க நன்றி ஆனந்தா…

      அன்புடன்
      ரமணன்


மறுமொழியொன்றை வழங்குக